வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் நடவடிக்கை தொடர்பிலும் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் தொடர்பிலும் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித சிக்கல்களும் இல்லை என காவல்துறை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்தப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 362 என காவல்துறை ஊடாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த தேர்தல் காலப்பகுதியில் குற்றச் செயல்கள் தொடர்பில் 104 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் விதி மீறல் தொடர்பில் 314 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதற்கமைய, மொத்தமாக 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
7 வேட்பாளர்கள் உட்பட 512 கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேநேரம், 3 அரச வானகங்கள் 3 உட்கட 153 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை ஊடாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காவல்துறை அதிகாரிகள் 5 பேர் அடங்கிய 3 ஆயிரத்து 69 கண்காணிப்பு குழுக்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை தேர்தல் பிரிவின் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அசோக தர்மசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment