தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுச்சான்றுகளை அடையாளங்களை அழித்தொழித்தபின்னர் வரும் அபிவிருத்தியை ஏற்கோம்.!தவிசாளர் ஜெயசிறில் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, August 20, 2020

தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுச்சான்றுகளை அடையாளங்களை அழித்தொழித்தபின்னர் வரும் அபிவிருத்தியை ஏற்கோம்.!தவிசாளர் ஜெயசிறில்

 

அபிவிருத்தி தேவைதான்.அதற்காக தமிழ்பேசும் மக்களின் தொல்பொருள் வரலாற்றுச்சான்றுகளை அடையாளங்களை அழித்து அதன்மேல் வழங்கப்படும் அபிவிருத்திகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சபை அமர்வில் தெரிவித்தார்.

சபையின் 30வது மாதாந்த அமர்வு நேற்று(17) திங்கட்கிழமை தவிசாளர் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் மு.காண்டீபனுக்குப் பதிலாக கட்சியினால் நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர் கந்தசாமி ஜெயதாசன் நேற்று முதன்முதல் சபைக்கு சமுகமளித்தார். அவரை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஊழியர்கள் மாலைசூட்டிவரவேற்றனர்.

சபையிலும் அனைத்து உறுப்பினர்களும் அவரை வாழ்த்தி உரையாற்றியதுடன் தவிசாளரும் வாழ்த்தியுரையாற்றினார். தொடர்ந்து அவரது கன்னியுரை இடம்பெற்றது.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும்  பேசுகையில்:

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தந்தையான இரா.சம்பந்தன் ஜயா  87வயதில் மீண்டும் பாராளுமன்றஉறுப்பினராகத்தெரிவு செயய்யபட்டுள்ளமையை வாழ்த்துகிறேன்.

அதேபோல் சிறையிலிருந்துகொண்டு அதிகூடிய வாக்குகளைப்பெற்று அமைச்சராகும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்கஅமைச்சரான வியாழேந்திரன் பாராளுமன்றஉறுப்பினராகும்  கோ.கருணாகரன் இரா.சாணக்கியன் எமது மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எமது கட்சியினால் நியமிக்கப்பட்டிருக்கும் த.கலையரசன் ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.


நாட்டில் ஆட்சிபீடமேறியிருக்கும் பிரதானகட்சியின் பங்காளராகஇருக்கும் சு.கட்சி சார்பில்  இங்கு இன்று வந்துள்ள புதியஉறுப்பினர் ச.ஜெயதாசனுக்கும் வாழ்த்துக்கள். கட்சிக்கு அப்பால் இந்தமண்ணுக்கும் மக்களுக்கும் சிறந்தசேவையாற்ற வாழ்த்துக்கள்.


இந்நாட்டின் தேசியக்கொடியில் சிறுபான்மையினரின் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.கிழக்கு தொல்பொருள் செயலணியில் தமிழ்பேசும் பிரிதிநிதிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனவே தமிழ்பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஆளும்கட்சியிலுள்ள தமிழ்பேசுவோர் குரல்கொடுக்கவேண்டும். என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.