தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட வேண்டும் காரணம் அம்பாறை மாவட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பை பலம் பொருந்திய நிலையில் வைப்பதற்காக என்னோடு இணைந்து பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்டவர் இதனைவிடுத்து இந் நியமனம் வேறு ஒருவருக்கு வழங்கப்படுமாயின் எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கொதிப்படைந்து மாற்று முடிவொன்றை மேற்கொள்ளக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவர்
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உப தலைவர்களுள் ஒருவருமாகிய முருகேசு இராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
அவர் தனது அறினக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடைபெற்றுமுடிந்த பொதுத் தோர்தில்pல் தெவாகியுள்ளனர். ஆனால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமக்குரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கின்றனர் இவ்வாறான சூழ்நிலையில் இம்மாவட்ட மக்களின் மீது உண்மையான பற்றும் பாசமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்குமாயின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற நியமனத்தை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசனுக்கு வழங்க வேண்டும்.
அம்பாறை மாவட்டம் என்பது மாற்று சமூகங்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள மாவட்டமாகும் இந் நிலையில் எமது மக்கள் அரசியல் அநாதைகளாக மாறக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம். இம்மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் தீர்க்கபடாத பிரச்சனைகள் அதிகமுள்ளன இப்பிரச்சனைகளை தீhத்து வைப்பதற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகும்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.பிஜசேன மாற்றுக்கட்சிக்கு சென்ற போது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாகினர் இவ்வாறான சூழ்நிலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில் நானும் தம்பி தவராசா கலையரசனும் எமது மக்களால் தேர்தெடுக்கப்பட்டோம் எமது சக்திக்கு உட்பட்டவகையில் பல பணிகளை மக்கள் நலன் கருதி செய்திருந்தோம். இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பாறை மாவட்டத்தில் பலமான ஒரு அரசியல் பேரியக்கமாக காலூன்ற வைத்தோம்
அம்பாறை மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு எமது தமிழத் தேசியக் கூட்டமைப்பில் தெரிவாகிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்ட பல தவறுகள் உள்ளன இதனால் எமது மக்கள் மாற்று அரசியலைப்பற்றி சிந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர் எனினும் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்த பெறுமை தவராசா கலையரசனை சாரும்.
எனவே தமிழத் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பிரதேச வாதம் ஊர்வாதம் பாராமல் அம்பாறை மாவட்டமும் எமது மாவட்டம் என்பதை மனதில்கொண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்;கு வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் நானும் எமது மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் உரிய வேளையில் எவரும் எண்ணிப்பார்க்க முடியாத மாற்று தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்படும். எமது மாவட்ட தமிழ் மக்கள் எடுக்கின்ற முடிவுக்கு நான் அடிபணிவேண் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்
கடந்த காலங்களிலும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தபோதும் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை இம்முறையும் அவ்வாறாறு செய்ய முனைந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தூரமாக்கிவிடுவார்கள் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment