அம்பாறை தமிழர்களை ஒருகுடையின்கீழ் கொணர்வதே எனது முதல்பணி! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, August 11, 2020

அம்பாறை தமிழர்களை ஒருகுடையின்கீழ் கொணர்வதே எனது முதல்பணி!

 

சிதறுண்டு போய்க்கிடக்கும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஓரணியில் திரட்டி ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே எனது முதல் பணியாகவிருக்கும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் நாவிதன்வெளிப்பிரதேசசபைத்தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

தேசியபட்டியல் எம்.பியாக நியமனம் பெற்றபின் அவர் கருத்துத்தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

எனக்கும் எமது கட்சிக்கும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தேர்தலில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பறிகொடுத்து கவலையுடன் நிர்க்கதியாய் நின்றவேளை  இந்நியமனத்தை எனக்குவழங்க சிபார்சுசெய்த கட்சித்தலைமைகளுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள

அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் இரு சமுகங்களாலும் நசுக்குண்டு அரசியல் அநாதைகளாய் இருக்கின்றனர். அவர்களை ஒன்றுதிரட்டி ஓரணியின்கீழ்கொண்டுவந்து மக்கள் பணி செய்யமுதலில் திட்டமிட்டுள்ளேன்.

பலவழிகளாலும் பின்தங்கியுள்ள எமது தமிழ்ப்பிரதேசங்களையும் மக்களையும் அபிவிருத்தி செய்வதில் அதிக அக்கறை காட்டுவேன். அவ்வண்ணம் செயற்பட்டு முன்னுதாரணமான மாவட்டமாக மிளிரச்செய்வேன்.

எமது கட்சி வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.எமது சகோதரர்கள் பிரிந்துநின்று செயற்பட்டுள்ளனர். அவர்களையும் ஒன்றிணைக்கவேண்டியதேவையுள்ளது.

மாற்றுக்கட்சிகளில் இயங்கிய எமது சகோதரர்களை எதிரியாக பார்க்கமாட்டேன். எல்லோரையும் அரவணைத்து பயணிப்பேன். உரிமையுடன்கூடிய அபிவிருத்தியை முன்கொண்டுசெல்ல அனைவரும் எனக்கு ஒத்துழைக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.