கற்பிட்டி – பள்ளிவாசல்துறை கடற்பிராந்தியத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பைகளில் பொதியிடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 800 கிலோகிராமுக்கும் அதிகமான மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மஞ்சள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக, கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையை சுங்கத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment