கொரோனாவால் நாளை இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, August 20, 2020

கொரோனாவால் நாளை இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு....

 

கொரோனாவால் நாளை இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு இந்தியாகனடா 10கவிஞர்கள்பங்கேற்பு:பேராசிரியர் பாலசுந்தரம் தலைமை.

இந்தியா மற்றும் கனடா நாட்டின் பத்துக் கவிஞர்கள் இணையவெளியில் பங்கேற்கும் இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு நாளை(22)சனிக்கிழமை நடைபெறுகிறது.

கொரோனா காரணமாக வான்வெளிப்பயணங்கள் தடைபட்டிருப்பதால் இணையவெளியில் இக்கவியரங்கை நடாத்த கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவம் முயற்சியெடுத்துள்ளார்.

கனடாவில் வாழும் காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கை இலக்கியவெளி காலாண்டு இலக்கியசஞ்சிகையும் தமிழ் ஆதர்ஸ்.கொம்மும் இணைந்து நடாத்துகிறது. இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை(22) மாலை 7மணிக்கும் கனடாவில் காலை 9.30மணிக்கும் இக்கவியரங்கை நெறிப்படுத்தும் கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவத்தின் யுரியூப் முகநூல் சூம் வழிகளில் நேரலையாகப் பார்க்கமுடியும்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.