உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 263,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 22,860,184 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,554 பேர் பலியானதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 797,105 க்கும் அதிகரித்துள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 5,746,272 பேரும், பிரேஸிலில் 3,505,097 பேரும், ரஷ்யாவில் 942,106 பேரும், தென்னாப்பிரிக்காவில் 599,940 பேரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை இந்தியா 2,904,329 மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,515,681 ஆகவும் 6,547,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment