கொரோனாவுக்கு தடுப்பு மருந்து - Oxford பல்கலைக்கழகத்தின் முயற்சி வெற்றி? - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

திங்கள், 20 ஜூலை, 2020

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து - Oxford பல்கலைக்கழகத்தின் முயற்சி வெற்றி?


கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று நோயைக் குணப்படுத்த அதிகாரபூர்வமாக எந்த மருந்தும் அறிவிக்கப்படாத நிலையில் பல நாடுகளும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றன.

தொற்று நோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மருந்துகள் பரிசோதனை முயற்சிகளில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒக்ஸ்போர்ட் Oxford பல்கலைக்கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸூக்கான இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தத் தடுப்பு மருந்துக்கு ´AZD1222´ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா தடுப்பு மருந்து சுமார் 1,077 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் இந்தத் தடுப்பு மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் கேள்வி மனு கொடுத்துள்ளது.கொரோனா ரைவஸ் மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் ஒக்ஸ்போர்ட்டின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.