தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதனால் வழமையாக திகாமடுள்ள மாவட்டத்தில் தழிழர்களுக்கு கிடைக்கின்ற ஒரு பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்து மக்களை அனாதையாக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள் இதனை உணர்ந்து தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றைக் காப்பாற்றுவதற்காக தமிழ் மக்கள் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். என முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் திகாமடுள்ள மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் த.கலையரசன் தெரிவித்தார்
நாவிதன்வெளி 7 ஆம் கிராமம் விளையாட்டுக்கழகம் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இரவு 7 ஆம் கிராமத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் உரிமையினை வென்றெடுப்பதற்காக அகிம்சைவழி மற்றும் ஆயுதவழிகளில் போராடியிருந்த நிலையில் அனைத்தினையும் இழந்துஇன்று தவித்துக்கொண்டிருக்கின்றோம் இறுதியாக எங்களிடம் இருக்கின்ற ஒரே ஒருபலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் கிடைக்கிம் அரசியல் பலமே இதனை தக்கவைத்துக்கொள்ளும் பொறுப்பு தமிழ் மக்களாகிய உங்களது கையிலேதான் தங்கியுள்ளது.
அம்பாரை மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 5 திகதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு 60 வீதமான வாக்குகள் அளிக்கப்படாத பட்சத்தில் வழமையாக கிடைக்கும் ஒரு தழிப் பிரதிநிதித்துவத்தினை இழக்கநேரிடும் சில அரசியல் வாதிகள் மாற்றுக் கட்சிகளின் கயிற்றை விழுங்கிவிட்டு மூன்றாம் நிலையில் இருக்கும் எங்களது வாக்குகளை சிதைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்தது அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்க் கூறி திட்டமிட்ட சதிகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள் அதனை தடுத்து நிறுத்தியிருக்கலாம்தானே அதே போன்று அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளில் தமிழர்களின் இடம் தொல்பொரு அடையாளம் இருப்பதாகத்தெரிவித்தபோதும் தமிழர்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டபோதும் இந்த விடயங்களை தடுத்து நிறுத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியாக கையாண்டது. தற்போதும் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் தடுத்து நிறுத்துவதற்காக எமது தலைமை சரியக கையாண்டு வருகிறது ஆனால் தற்போது தேர்தலில் குதித்துப் போட்டியிடுகின்ற எவரும் இந்த விடயங்களைக் கதைக்காமல் வாய் மூடிய மௌனிகளாக இருந்தனர்.
என்னைப் பொறுத்தமட்டில் மக்களுக்கான அபிவிருத்தியை நேர்மையாகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் கடந்த மாகாணசபைத்தேர்தலில் அதிகூடிய விருப்புவாக்கினை இம் மாவட்ட மக்கள் எனக்கு வழங்கி இருந்தனர் அவர்களுக்குத் தலைவணங்குகின்றேன் அதே போன்று கடநத் பாராளுமன்றத்தேர்தலில் இரண்டாமிடம் பெற்றிருந்தேன் இவ்வாறு எங்கள் மக்கள் என்னை ஆதரித்து இருப்பது எனது நேர்மையான அரசியல் பயணத்திற்கே ஆகும் தற்போது நடைபெறும் பொதுத் தேர்தலில் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பட்சத்தில் அம்பாரை மாவட்ட மக்களுக்கு இயன்றளவு என்னாலான உதவிகளைச் செய்வேன் எனத் தெரிவித்தார்
No comments:
Post a Comment