எனது பூரணஆதரவை சக வேட்பாளர் கணேசுக்கு வழங்குகிறேன். கூட்டமைப்பின் பெண்வேட்பாளர் ஜெயராணி ..... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 13, 2020

எனது பூரணஆதரவை சக வேட்பாளர் கணேசுக்கு வழங்குகிறேன். கூட்டமைப்பின் பெண்வேட்பாளர் ஜெயராணி .....

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் எனது பூரண ஆதரவை  பாராளுமன்ற உறுப்பினராக வரவிருக்கும் முன்னணி சகவேட்பாளர் தம்பி செல்வராஜா கணேசுக்கு வழங்குகிறேன். எனவே அம்பாறை மாவட்ட தமிழ்ப்பெண்கள் தங்களது வாக்குகளை த.தே.கூட்டமைப்பிற்கும் 10ஆம் இலக்க வேட்பாளர் கணேசுக்கும் அளியுங்கள்.'

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பாக  திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு பெண்வேட்பாளரான காரைதீவைச்சேர்ந்த திருமதி சின்னையா ஜெயராணி தெரிவித்தார்.

பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏற்றத்தில்  த.தே.கூ.வேட்பாளர் செல்வராஜா கணேஸை ஆதரித்து நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் பகிரங்கமாக இதனைத் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் ஏற்ற மகளிரணி பிரமுகர் செல்வி எஸ்.பானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் த.தே.கூ.மாவட்ட பேச்சாளர் கி.ஜெயசிறில் சட்டமாணி அருள்.நிதான்சன் ஆகியோரும் உரையாற்றினர்.

அங்கு வேட்பாளர் ஜெயராணி மேலும் பேசுகையில்:
இம்முறை அம்பாறை மாவட்ட தேர்தல் என்பது மிகமுக்கியமானது. தமிழ்மக்கள் மிகவும் நிதானமாகவும் ஆழமாகவும் சிந்தித்து இனவிடுதலைக்காக வாக்களிக்கவேண்டும்.

இன்று விமர்சிப்பதற்குக்கூட உரிமையுள்ள கட்சியாக த.தே.கூட்டமைப்பு திகழ்கிறது. தமிழ்மக்களின் நலனில் என்றும் அக்கறையுடன் செயற்படுகின்ற எமது கட்சி ஒன்றுதான் உங்கள் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய கட்சி என்பதை மறந்துவிடக்கூடாது.

நாம் கருணாவையோ யாரையோ விமர்சிக்கவில்லை. மக்கள் அனைவரையுமறிவார்கள். எமது இருப்புகளை அடையாளங்களை தக்கவைக்கவேண்டும் எனில் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களியுங்கள். ஒருசில வேட்பாளர் மீதுள்ள வெறுப்பு கோபத்திற்காக கட்சியை ஒதுக்காதீர்கள். இது உங்கள் தாய்வீட்டுக்கட்சி. இது ஒன்றுதான் உங்களுடன் சாகும்வரை பயணிக்கும்.

எனவே அன்புக்குரிய பெண்களே எனது அன்பான தயவான வேண்டுகோள் யாதெனில் எனக்கான வாக்குகள் அனைத்தையும் வேட்பாளர் தம்பிகணேசுக்கு வழங்குங்கள். நல்லதொரு தலைமைத்துவம் கிடைக்கும். சேவையாற்றக்கூடியதொரு எம்.பியைத் தெரிந்த பெருமையும் உங்களுக்குக் கிடைக்கட்டும். நன்றி. என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.