சகலதமிழ்மக்களும் இனவிடுதலைக்காக வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, July 10, 2020

சகலதமிழ்மக்களும் இனவிடுதலைக்காக வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும்


சகலதமிழ்மக்களும் இனவிடுதலைக்காக வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும்.
அரசியல்தீர்வுக்குவலியுறுத்துவோம்.
த.தே.கூட்டமைப்பு திகாமடுல்ல வேட்பாளர் கலாநிதி கணேஸ்.

இன்று தமிழ்மக்கள் இக்கட்டான சூழ்நிலையிலுள்ளனர். எனவே தமக்குள் உள்ள கசப்புணர்வுகளை மறந்து இனவிடுதலைக்காக அரசியல்தீர்வுக்காக வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட இ.த.அரசுக்கட்சியின் வேட்பாளர் பொறியிலாளர் கலாநிதி செல்வராஜா கணேஸ் உரையாற்றினார்.

ஆலையடிவேம்பு நாவற்காட்டில் தவிசாளர் கி.ஜெயசிறில் (காரைதீவு) முன்னிலையில் நடைபெற்ற கூடட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:

கடந்தகாலங்களில் மாறிமாறிவந்த அரசாங்கங்கள் தமிழ்மக்களை ஏமாற்றிவந்துள்ளன. நாம் சிலகட்டங்களில் அரசுக்கு சாதக மாகஇயங்கி எமது மக்களுக்காக பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். 

போராளிகளுக்கு தொழில் வழங்கலை ஊக்குவிக்க 1300மில்லியன்ருபா ஒதுக்கப்பட்டிருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தவென 2750மில்லியன்ருபா ஒதுக்கப்பட்டிருந்தது. இறுதிநேரத்தில் அவை அரசியல்மாற்றத்தால் குழம்பியது.

நாம் அமைச்சரவையில் பங்கேற்பதில்லை.கடந்த கால வரலாறு அதற்கு சான்று பகரும்.எமதுஇனத்திற்கானஅரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். இனவிடுதலையே முக்கியம். அதேவேளை அபிவிருத்தியையும் முன்கொண்டுசெல்லவேண்டும்.

தமிழ்மக்கள் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்க முதலில் நீங்கள் ஊக்குவிக்கவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும்.பின்னர்தான் விருப்புவாக்கு பற்றி சிந்திக்கவேண்டும். கடந்தகாலத்தில் தென்னிலங்கையில் விருப்புவாக்கிற்காக கொலைகூட நடந்திருக்கிறது. எனவே சக வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்புடன்செயற்படவேண்டும்.

புதிதுபுதிதாக கட்சிகளையும்சின்னங்களையும் உருவாக்கிக்கொண்டு அரசின் நிகழ்ச்சிநிரலுக்கமைவாக செயற்படுவதற்கு துணைபோகின்றனர்.
அவர்களின்பின்புலத்தில் யார் நிற்கிறார்கள் என்பதை எமதுதமிழ்மக்கள் படித்தவர்கள்.அவர்கள் நல்லதுகெட்டதைஅறிவார்கள்.

அரசின் பின்புலத்தில் தமிழ்மக்களைபிளவுபடுத்தி அரசுக்கு கொஞ்ச வாக்ககளை பெற்றுக்கொடுப்பதே அவர்களதுநோக்கம். அவர்களைமக்கள் நிராகரிப்பார்கள்.
தமிழ்த்தேசியத்துடன் எமதுதமிழ்மக்கள் உள்ளனர் என்பதையிட்டுபெருமையடையவேண்டும்.

எனவே அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்கள் கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து பொறாமைகளைத்தவிர்த்து பிளவுகளைபேதங்களை மறந்த ஒரே குடையின்கீழ்அதாவது இனவிடுதலையை மையமாகவைத்துஒற்றுமையாக செயற்படவேண்டும்.

உண்மையில்நீங்கள் ஸ்திரமாக வேலைசெய்தால் இரண்டு பாராளுமனற் உறுப்பினர்களைக்கூடபெற வாய்ப்புண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. எது எப்படியிருந்தாலும் தமிழ்மக்களுக்கான பிரதிநிதி கட்டாயம் எமது வீட்டுச்சின்னத்திலிருந்துதான் தெரிவாவார்என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.

70வருடகாலமாக தந்தைசெல்வா கட்டிக்காத்துவந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அந்த வழியில் வந்தவரே சம்பந்தன் ஜயா. அவர் கிழக்குமண்ணின் பிரதிநிதி.எமதுமக்கள் பாராளுமன்றம் மட்டுமல்ல மாகாணசபைத்தேர்தலிலும் எமக்கு கூடுதலான ஆசனங்களைப்பெற்றுத்தந்தவர்கள். அது தொடரும் என்பது எமது பரிபூரண நம்பிக்கை. என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.