கண்டுபிடிப்புகள் மற்றும் தொல்பொருள் துறையின் தற்போதைய நிலை தொடர்பில் கல்விசார் உரையாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே தேசிய தொல்பொருள் மாநாடு நடத்தப்படுகிறது.
ஜுலை மாதம் 7ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு 'பாரம்பரியத்தை தனிமைப்படுத்தாதிருப்போம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய தொல்பொருள் மாநாடு நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய தொல்பொருள் மாநாட்டை ஆரம்பித்து மங்கள விளக்கு ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மர நடுகை வேலைத்திட்டத்திற்கு அமைய மன்றக் கல்லூரி வளாகத்தில் மரக் கன்றொன்றும் நடப்பட்டது.
No comments:
Post a Comment