மணல் ஏற்றிக் கொண்டுசென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மாலை 6.35 மனியவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூநகரி பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் யாழில் இருந்து பூநகரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமுமே இவ்வாறு சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த யாழ் தேர்தல் தொகுதியில் சுயற்சைக்குழுவில் போட்டியிடும் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும் முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகன சாரதியும் காயங்களுக்கு உள்ளான நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றம் செய்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் தடம்புரண்டமையால் சிறிது நேரம் சங்குப்பிட்டி ஊடான போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
No comments:
Post a Comment