துரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, July 7, 2020

துரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...

துரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இன்று ஆலையடிவேம்பு கண்ணகி புரம் கிராமத்தில் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

மேலும் தெரிவிக்கையில்.
பேரினவாதம் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் யாரும் வர கூடாது என்பதற்காக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நாட்டில் போராட்டம் நடந்து முடிந்த கையோடு சனாதிபதி 13ம் திருத்த சட்டத்தை நடைமுறை படுத்தப் போவதாக சர்வதேசத்திற்கு தெரிவித்திருந்தார்.அதே நிமிடம் 13ம் திருத்த சட்டத்தில் உள்ள மாகாணசபை அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கான முன்னெடுத்த முன்னெடுப்புக்களை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இந்திய அரசும் , இலங்கை அரசும் தமிழ் தரப்பும் இணைந்து ஏற்படுத்தப்பட்டதுதான் மாகாண சபை அதிகாரங்கள் . 2012 திவிநெகும சட்டமூலத்தின் மூலம் இல்லாமல் செய்வதற்கு நாங்கள் பதினொருபேரும் எதிர்த்தோம் இன்று எம்மை விமரசித்து வருகின்றவர்கள் இதனை ஆதரித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டால் எமது அடையாளங்கள் இல்லாமல் செய்யப்படும்.எனவே எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து எம்மையும் எமது மக்களையும் நேசிக்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழனாக பிறந்து விட்டேன் என வெட்கப்படுகின்றேன் ஏனென்றால் எங்களுடைய இனம் அழிவுப்பாதைக்கு இட்டு சென்றவர்கள் பொய்யான பிரச்சாரங்களை சொல்லி எமது மக்களை இருட்டறைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

பெறுமதியான சர்வதேசமே வியந்து நின்ற பலமான அமைப்பு இந்த நாட்டிலே இருந்து அதனை அழித்து இல்லாமல் செய்து மார் தட்டுபவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும் போது தான் கௌரவமான பெயர் இருந்தது அவர்தான் விநாயகமூர்த்தி முரளிதரன். 
இவர் செய்த துரோகதனத்திற்கு நன்றி கடன் செலுத்த போகின்றார்களா என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன் எம்மை நடு தெருவில் நிறுத்தியது யார் சம பலத்துடன் பேசக்கூடிய நிலையில் அழித்தது யார் என்ற வினாவை தொடுக்க வேண்டும் என தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.