போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதால உலக செயற்பாடுகளை ஒழிப்பதற்கு திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பூஜித் வெதமுல்லவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக ஊடக சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஞ்சுள செனரத் கடமையாற்றிய நிலையில் அவருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டதை அடுத்து புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை வேறு மார்க்கங்களில் விற்பனை செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment