அம்பாறையில் கடல் மீன்களின் விலை அதிகரிப்பு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 8, 2020

அம்பாறையில் கடல் மீன்களின் விலை அதிகரிப்பு...

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அதிகளவு மீன்கள் பிடிக்கப்பட்டதை அடுத்து விலைகள் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொண்டள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் சூரை ஒரு கிலோ 500 ரூபாய் முதல் 550 வரை விற்பனை செய்யப்பட்டதுடன் முரல் ஒரு கிலோ 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 450 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1400 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 900 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 400 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1200 ரூபாயாகவும் வளையா மீன் 600 ரூபா திருக்கை மீன் ஒரு கிலோ 700 ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இருந்தபோதிலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை , கல்முனை, பாண்டிருப்பு , சாய்ந்தமருது ,நற்பிட்டிமுனை பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.இருந்தபோதிலும் சில மீனவர்கள் மீன்களின் விலை ஏற்றங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும் என்பது தவிர்க்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியில் மாரி கால பருவ மழை இன்மையினால் அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.அத்துடன் கருவாடு வகைகளின் விலையும் இப்பகுதியில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.