வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 20, 2020

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்..



வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை சுகாதார நடைபெற்றது,
மரணித்த தந்தைக்கு பிதிர்க்கடன் செய்வது ஆடி அமாவாசையின் சிறப்பாகும். இம்முறை ஆடிஅமாவாசை உற்சவம் கடந்த 03ஆம் திகதி ஆரம்பமாகியது. நேற்று இவ்வுற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது,

கொரோன அச்சம் கருதி இம்முறை வரலாற்றில் முதல்தடவையாக பிதிர்க்கடன் செலுத்தும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது என ஆலயபரிபாலன சபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தீர்த்தமன்று ஆலய கிழக்கு வாசல் பிரதேசத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் 10 குருக்கள்மார் காலை 6 மணிமுதல் பக்தர்களுக்கு தனியான பிதிர்க்கிரியைகள் செய்து தர்ப்பை வழங்கப்பட்டது,  இந்தியா போன்ற நாடுகளில் இந் நடைமுறை இருக்கிறது. இங்கு இம்முறை அது புதிதாக அமுலாகியது,

சுகாதார நடைமுறையின் படி சமுக இடைவெளியைப் பேணுவதன் பொருட்டு முன் தொண்டர் படையினரும் மாஸ்க் அணிந்து பணியிலிருந்தனர். அவர்களிடம் உரிய பத்திரத்தைப் பெற்று குருக்களிடம் செல்லவேண்டும்.

அந்தவகையில் தந்தைக்கு பிதிர்க்கடன் செலுத்துவோர் குருக்களிடம் தனது மரணித்த தந்தையின் பெயர் நட்சத்திரத்தைத் தெரிவித்து கிரியைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் வங்கக்கடலில் நண்பகல் அளவில் தீர்த்தமாடுதல் நடைபெற்றது,
ஆனால் இம்முறை கொரோனா நிலைமையின் காரணமாக அன்னதானம் வழங்கல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடைத்தெரு வைக்கவும் களியாட்டங்கள் நடாத்தவும் தடைவிதிக்கப்பட்டது என்று ஆலயபரி பாலனசபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் மேலும் தெரிவித்தார்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.