மட்டக்களப்பு மாவட்டத்தின் காவலன் சதாசிவம் வியாளேந்திரனே- தமிழர் முற்போக்கு முன்னணியின் வந்தாறுமூலை கிழக்கு இணைப்பளர் - ரதிக்குமார் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 6, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் காவலன் சதாசிவம் வியாளேந்திரனே- தமிழர் முற்போக்கு முன்னணியின் வந்தாறுமூலை கிழக்கு இணைப்பளர் - ரதிக்குமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காவலன் சதாசிவம் வியாளேந்திரனே...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாளேந்திரனை தோற்கடிக்கச் செய்தால் அது ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வி என தமிழர் முற்போக்கு முன்னணியின் வந்தாறுமூலை கிழக்கு இணைப்பளர் ரதிக்குமார் அவர்கள் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் சதாசிவம் வியாளேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக தனது வளாகத்தில் நேற்று 05 நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,

இதுவரை காலமும் தமிழ் தேசியத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடி எந்த ஒரு எந்தவொரு கட்சியாலும் ஒரு விமோசனத்தையும் எமது தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.  காலங் காலமாக எமது மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வாழ்நாள் முழுவதும் வெறும் கையுடனும் அரசியல் அனாதைகளாகவும் வாழ்ந்த நாட்கள் மட்டுமே மீதி. எமக்காக ஒரு அரசியல் பலம் கிடையாது. எந்த அபிவிருத்தியும் எமக்கு முறையாக கிட்டவில்லை. இது தமிழ் மக்களின் சரித்திரமாக மாறிவிட்டது எனக் குறிப்பிட்டதோடு, கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நல்லாட்சியில் பங்கெடுத்த கூட்டமைப்பு கட்சியினர் அரசாங்கத்துடன் எதுவித நிபந்தனையும் இன்றி ஒதத்hசை வழங்கியதுடன்; தாங்களையும் வளர்த்துக் கொண்டு; சென்றது மிகவும் வேதனைக்குரிய விடமாகும்.

எனவே இவ்வாறான சம்பவங்களில் இருந்து மீண்டு எத் துணைக் கட்சிக்கும் சோரம் போகாமல் தற்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தின் முதுகெலும்பாகவும்; மட்டக்களப்பு மாவட்டத்து மக்களின் காவலனாகவும் உரிமை மற்றும் அபிவிருத்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று மக்களின் 16 போராட்டத்திற்கு மேல் முன்னேடுத்து வெற்றகண்ட ச. வியாளேந்திரனின் அவர்களை எதிர்வரும் தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் இல்லேயேல் இது வியாளேந்திரனின் தோல்லி அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இழப்பு என தெரிவித்ததோடு,

இக் கூட்டத்தில் தமிழர் முற்போக்கு முன்னணியின் இணைப்பாளர்களான ஜங்கரன் மற்றும் தயாரூபன் உள்ளிட்ட ஏனையோர் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.