கைரேகை அடையாளத்தை வைத்து 59 பேர் கைது.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

திங்கள், 13 ஜூலை, 2020

கைரேகை அடையாளத்தை வைத்து 59 பேர் கைது..

கைரேகை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு தேடப்பட்ட 59 குற்றவாளிகள் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனூடாக 103 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய, இதுவரை பொலிஸில் சரணடையாத குற்றவாளிகளே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டுவந்த 56 பேரும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 81 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 123 பேரும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 211 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.