'வளர்ந்துவரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்' திட்டத்தின்கீழ் காரைதீவில் மரநடுகை! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 17 ஜூன், 2020

'வளர்ந்துவரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்' திட்டத்தின்கீழ் காரைதீவில் மரநடுகை!

 
'வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் 'எனும் விசேட தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களது 'சுபிட்சத்தின் நோக்கு 'எனும் எண்ணக்கருவில் இலங்கையிலுள்ள வனாந்தரங்களின் அடர்த்தியை அதிகரிக்கும் முகமாகவும். பரவலாக மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் காரைதீவு கல்முனை அக்கரைப்பற்று பிரதான நெடுஞ்சாலை வீதிகளை பசுமையடையச் செய்யும் நோக்கில் நிழல்தரு மரங்கள் நடும் திட்டத்தை சம்மாந்துறை கவ்சோ அமைப்பு முன்னெடுத்துவருகிறது.

அந்த வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக நேற்று காரைதீவில் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் பிரதேசசபை வளாகத்தில் நிழலதரு மரங்கள் நடும் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

நிகழ்வில் சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் சபை உத்தியோகத்தர்கள் 'கவ்சோ' அமைப்பின் திட்டபணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் உள்ளிட்டோர் மரங்களை நட்டுவைத்தனர். 

இதன் போது இதற்குரிய மரக்கன்றுகளை வழங்கிய 'கவ்சோ' நிறுவனத்திற்கு நன்றியை பிரதேசசபைச் செயலாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.