காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்மானுடைய சடலம் பல பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் மூலம் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டம் மீறப்பட்டுள்ளது. இவ்வாறான ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளர் அல்லது நோய் பரவல் எதிர்காலத்தில் இனங்காணப்பட்டால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக நாட்டு மக்களும் சுகாதாரத்துறையினரும் முப்படையினரும் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் போது பொது மக்களுக்கு தமது உறவினர்கள் இறக்கும் போது ஒரு நாளிலேயே இறுதிக் கிரிகைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகளுக்கு தமது பெற்றோரின் உடலைப் பார்க்க முடியாத நிலைமையும் சில பெற்றோருக்கும் தமது பிள்ளையின் உடலை பார்க்க முடியாத நிலைமையும் ஏற்பட்ட சம்பவங்கள் நாட்டில் பதிவாகினஇந்நிலையில் கடந்த வாரம் உயிரிழந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்மானுடைய சடலம் 5 பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி பொது மக்கள் ஒன்று கூடுவதற்கு வழிவகுக்கப்பட்டதுஎனவே இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட சுகாதார சேவை அதிகாரிகளுக்கு அமைச்சருடன் தொடர்புடையவர்கள் அழுத்தம் பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான செயற்பாடுகளை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்இவ்வாறு அமைச்சரது சடலத்தைக் கொண்டு சென்று வைக்கப்பட்டிருந்த போது ஏதேனும் நோய் அறிகுறிகள் அல்லது நோயாளர்கள்இனங்காணப்பட்டால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க நாம் தயாராகவிருக்கின்றோம். பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் என்ற ரீதியில் தேசிய ரீதியாகவும்தேவையேற்படின் சர்வதேசத்துடன் தலையீட்டுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகவுள்ளோம் | |
Post Top Ad
Monday, June 1, 2020

Home
Unlabelled
தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எச்சரிக்கை
தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எச்சரிக்கை
Share This

About Celina
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment