நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்களை துப்புரவு செய்யும் பணிகளுடன் தொழுகை ஆரம்பம். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 12 ஜூன், 2020

நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்களை துப்புரவு செய்யும் பணிகளுடன் தொழுகை ஆரம்பம்.
கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட  பள்ளிவாசல்களை துப்புரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .

 அரசாங்கம் மத தலங்களை நிபந்தனைகளோடு  திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மூடப்பட்டுக் கிடந்த பள்ளிவாசல்களை சுத்தம் செய்யும் பணிகள்  தற்போது இடம்பெற்று வருகின்றன .

  அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட சாளம்பைக்கேணி 5 சாளம்பைக்கேணி 4 கிராம சேவை பிரிவில்  அமைந்துள்ள பள்ளிவாசல்களை அப்பகுதி இளைஞர்கள் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள்  சேர்ந்து  வெள்ளிக்கிழமை  ( 12 ) சிரமதானம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

மேலும்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனை கல்முனை நற்பிட்டிமுனை சாய்ந்தமருது மாளிகைக்காடு சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த சிரமதான நடவடிக்கையினை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருவதனை காண முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.