இவ் வருட ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 17 ஜூன், 2020

இவ் வருட ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு...உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஆஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், 93 ஆவது ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவதாக இருந்ததது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்கர் வரலாற்றிலேயே நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது இது 4-வது முறையாகும்.

இதற்கு முன்னதாக 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட வெள்ளம், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டது, 1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரோனல்டு ரேகன் கொல்லப்பட்டது ஆகிய மூன்று
காரணங்களுக்காக மட்டுமே ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது வரலாற்றிலேயே நான்காவது முறையாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.