ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமெரிக்க போராட்டங்களை விமர்சித்த அழகிப்பட்ட மாடல் .... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 4, 2020

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமெரிக்க போராட்டங்களை விமர்சித்த அழகிப்பட்ட மாடல் ....




கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருந்தபோது மரணமடைந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை இழிவு படுத்துவதாக, அழகிப்பட்டம் வென்ற பெண் ஒருவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.


பிரேசிலிய - சீன வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா கேட்டி ஜேம்ஸ் என்னும் அந்த மாடல் 2017இல் மிஸ் யுனிவர்ஸ் மலேசியா பட்டம் வென்றவர்.


"சில பாடங்களைப் படிப்பதற்காக, கறுப்பினத்தவராக அமெரிக்காவில் பிறக்க நீங்கள்தான் முடிவு செய்தீர்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.


போராட்டக்காரர்களிடம் 'ரிலாக்ஸ்' என்றும் தனது சமூக ஊடகப் பதிவில் கூறியிருந்த அவர், "வெள்ளை இனத்தவர்கள் வென்றுவிட்டதுபோல தெரிகிறது, அவர்களுக்கு உங்கள் மீது அதிகாரம் உள்ளது," என்று கூறியிருந்தார்.


இதனால், அவரது அழகிப்பட்டம் பறிக்கப்படவேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் விமர்சித்தனர்.


தற்போது, தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ள சமந்தா, மலேசிய பள்ளியில் வெள்ளை இன மாணவியாக இருந்த தனக்கே இனவெறியை எதிர்கொண்ட அனுபவம் உண்டு என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.