கல்முனையில் பாரிய தீயினால் பல்பொருள் அங்காடி எரிந்து நாசம் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 8, 2020

கல்முனையில் பாரிய தீயினால் பல்பொருள் அங்காடி எரிந்து நாசம்



கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இத் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை(7) மாலை 3.30  மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கல்முனை  பொலிஸார்,மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர்  பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன்  சுமார் 1 மணி நேரத்தின் பின் தீவிர முயற்சி காரணமாக தீ மேலும் பரவாமல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து    மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா அல்லது நாசகார செயற்பாட்டுடன் தொடர்புடையதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.