கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகனாலய வளாகத்தில் புதிதாக நான்கு குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
காரைதீவு இளைஞர்களின் முழுமுயற்சியால் இக்கிணறுகள் அமைக்கப்பட்டுவருவதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
கொரோனாவின் உக்கிரம் சற்று தணிந்துள்ளவேளையில் ஆடிவேல்விழாவை ஆலயம் எதிர்நோக்கியுள்ள காலகட்டத்தில் இத்தகைய கிணறுகள் அமைக்கப்படுவது சாலப்பொருத்தமாகும் என்று மேலும் சொன்னார்.
காரைதீவு மக்களின் ஆன்மீகப்பற்றின் பிரதிபலிப்பாக ஏலவே எமது ஆலயவளாகத்தில் இருபெரும் யாத்திரீகர் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்சமயம் 4 குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுவருவது பாராட்டுக்குரியது என்றார்.
(காரைதீவு சகா)
No comments:
Post a Comment