அம்பாறைமாவட்டத்தில் பாடசாலை வகுப்பறை மற்றும் பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கை. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 29, 2020

அம்பாறைமாவட்டத்தில் பாடசாலை வகுப்பறை மற்றும் பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கை.


நாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும்  பகுதியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இன்று 29ஆம் திகதி திங்களன்று பாடசாலைக்கு அதிபர் ஆசிரியர்கள்  கல்விசாரா ஊழியர்கள்  வருகை தந்து பாடசாலை வகுப்பறை மற்றும் பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனால்  பாடசாலைக்கு எந்த  மாணவர்கள் சமுகமளிக்கவில்லை.எனினும்  மாணவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக அவர்கள் வரவழைக்கப்படவிருக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சம்மாந்துறை  அக்கரைப்பற்று பொத்துவில் திருக்கோவில்  உள்ளிட்ட கல்வி வலயங்களில்   பாடசாலை சமூகம் சிரமதானங்களை முன்னெடுத்து தயாராகி வருகின்றதை அவதானிக்க முடிகிறது.

கிழக்கு மாகாணத்தில்  திங்கட்கிழமை(29) பாடசாலைகள் ஆரம்பமாகும்போது அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் சீராகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை அவதானிக்க வலயரீதியாக கண்காணிப்புக்குழுக்கள் விஜயம் செய்ய உள்ளன.

இதற்கென மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுக்கும் கல்வி அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

இதேவேளை அந்தந்த வலயமட்டத்திலும் கல்விசார் உத்தியோகத்தர்கள் இன்று பாடசாலைகளைத் தரிசித்து கண்காணித்து உரிய ஆலோசனைகளை வழங்குவதுடன் கல்வித்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

கொரோனாத்தடுப்புச் செயற்பாடுகள் மற்றும் நேரசூசி தொடர்பில் பாடசாலைமட்டத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் அதிபரால் மேற்கொள்ளப்படவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வாரம் பாடசாலை சுத்தமாக்கல் தொற்றுநீக்கல் கைகழுவுசாதனங்கள் பொருத்துதல் பெற்றோர் ஆசிரியர் நலன்விரும்பிகளை அழைத்து கலந்துரையாடி ஒத்துழைப்பைப் பெறல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் சுகாதார துறை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.

சளிஇ இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.








சந்திரன் குமணன்
அம்பாறை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.