காணாமல் போன துப்பாக்கிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 30, 2020

காணாமல் போன துப்பாக்கிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்...


பாதாள உலகக்குழுவிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்களுக்கு மேலதிகமாக இன்னும் 7 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அந்த துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஹோமாகம - பிட்டிபன பகுதியிலுள்ள நான்கு மாடி வர்த்தகம் நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி - 81 ரக துப்பாக்கி ஒன்றும் ரி-56 ரகத்தை சேர்ந்த 12 துப்பாக்கிகளும் நேற்று மீட்கப்பட்டன.

குறித்த துப்பாக்கிகள் தற்போது, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவரான “கொஸ்கொட தாரககே” தாரக பெரேரா விஜேசேகரவுடையது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் மீகொடை - இன்கம்மாருவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட “ பொட்ட கபில” என அறியப்படும் மடபாதகே கபில குமாரவிடம் பெறப்பட்ட தகவல்களுக்கமைய குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டன

இந்த துப்பாக்கிகள் குறித்த வர்த்தக நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது எதற்காக எனவும் எங்கிருந்து கொண்டு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பிலும் காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான அவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.