வெலிசர - நுகேவத்தை அரிசி ஆலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 225 கோடி ரூபாய் பெறுமதியான போதைபொருளானது போதை பொருள் ஒழிப்பு பிரிவினரின் உதவியுடனேயே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதை பொருள் வர்த்தகம் செய்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் வாயிலாகவே இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கஇப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த பிரிவில் கடமையாற்றும் உயர் அதிகாரி ஒருவரின் உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் இரகசிய காவல் துறை பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்படும் போதை பொருட்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட காவல் துறை உத்தியோகத்தர்கள் நால்வரும் சிவில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment