இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுர் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை அர்ஜன் அலெக்ஸாண்டர் (Harjan Alexander) என மாற்றிக் கொண்டுள்ளதாக சட்டமா அதிபரினால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் பெயர் மாற்றம் தொடர்பான செய்தி சர்வதேச பொலிஸார் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளன.
No comments:
Post a Comment