கிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை......... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 16, 2020

கிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை.........


கிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றினை தயாரித்து சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 28 வது மாதாந்த அமர்வு இன்று நாவிதன்வெளி பிரதேச கூட்ட மண்டபத்தில் காலை 10 மணிக்கு பதில் தவிசாளர் ஏ. கே அப்துல் சமட் தலைமையில் இடம்பெற்றது.கடந்த மாத கூட்டறிக்கை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இதனை தொடர்ந்து பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் வழங்குவதில் பிரதேச செயலகம் பல பாகுபாடுகளை உள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர். குடி நீர் வழங்கும் விடையத்தை பிரதேச சபை சிறப்பாக மேற்கொள்ளும் என இங்கு தெரிவித்தனர்.

பிரதேசசபை உறுப்பினர் அந்தோனி சுதர்சன் உரையாற்றுகையில் 
நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சொறிக்கல்முனை கிராமத்தில் பல குளங்கள் தனியாரால் அடாத்தாக பிடிக்கப்படுவது குறிப்பிட்டார். இவ்வாறு அபகரிக்கப்படுவதனால் கால்நடைகள் உட்பட விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக இங்கு குற்றம் சுமத்தினர்.

நாவிதன்வெளி பிரதேசத்தையும் கல்முனை பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதி ஆனது பலவருடங்களாக சீர் செய்யப்படாமல் உள்ள காரணத்தினால் ஒவ்வொரு மழை காலங்களிலும் பல உயிர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு கொடுக்கப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர் யோகநாயகன் குற்றம் சுமத்தினர். இதற்கு அவர் பல அமைப்புக்கள் ஊடாக பிரதமர் மற்றும் துறை சார் அமைச்சர்களை அணுகி கிட்டங்கி தாம்போதி பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது அதனைசில குறுகிய மனம் கொண்ட அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தி உள்ளதாக இந்த தெரிவித்தார்.

இதன்போது இடைமறித்து பேசிய பிரதேச சபை உறுப்பினர் சுதர்சன்
இந்த ஆட்சியாளர்கள் முந்தைய ஆட்சி காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளை கடந்த தேர்தல் மேற்கொண்டிருந்தனர். பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் நிறைவடைந்த உடன் இரவோடு இரவாக அனைத்து உபகரணங்களும் கொண்டுசெல்லப்பட்ட இங்கு சுட்டிக்கட்டினார் இதில் பல அரசியல் சூழ்ச்சிகள் உள்ளது இவற்றை முறியடித்து எமது மக்களின் பயணத்தை இலகுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .

அதனைத் தொடர்ந்து கிட்டங்கி பாலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.