அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் .. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 10, 2020

அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் ..அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் எனவும் குறித்த கட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டவர்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நிலைமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு அதிக பட்சமாக வாக்கு கிடைத்தாலும் சரி விகிதாசார அடிப்படையில் மாவட்டத்தில் வெல்லுகின்ற கட்சிக்கு சுமார் நான்கு உறுப்பினர்கள் கிடைக்கும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் குறித்த மாவட்டத்தை வெல்லப்போகும் கட்சி முஸ்லிம் வாக்குகளைப் பெற்றாலும் கூட முழு மாவட்டத்தை வென்றாலும் 4 உறுப்பினர்கள் தான் கிடைக்கும்.இதுதான் தலைவிதி.இவ்வாறு அம்பாறை தொகுதியில் மட்டும் நான்கு உறுப்பினர்களை பெறுவதாக இருந்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும்.

ஆனால் இத்தேர்தலில் சஜீத் கூட்டணி வெற்றி பெறாது என்பது முஸ்லிம் காங்கிரஸின் சாதாரண போராளி உட்பட அனைவருக்கும் தெரியும்.இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சி பிரிந்து தனியாக தேர்தலில் கேட்பதாகும்.ஆகவே சஜித் தலைமையிலான கூட்டணி வெல்லக்கூடிய சாத்தியம் இல்லை.அம்பாறை மாவட்டத்தை வெல்லக்கூடியது பொதுஜன பெரமுன கட்சி என்பது தான் உண்மை.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி(பொதுஜன பெரமுன கட்சி) அம்பாறை தேர்தல் தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட எண்பதாயிரம் வாக்குகளை பெற்றிருந்தது.எனவே மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து இருபதினாயிரம் வாக்குகளை இக்கட்சி எடுக்கக் கூடிய சூழ்நிலையில் இருக்கின்ற காரணத்தினால் மூன்று ஆசனங்களை பெறும்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் களம் இறக்கியுள்ள 6 வேட்பாளர்களும் இத்தேர்தலில் வெல்வது சாத்தியமற்றது. இந்த உலகமே தலைகீழாக பிரண்டாலும் நடக்க முடியாத சாத்திய கூறாக இவ்விடயம் இருக்கின்றது.ஆயினும் நாங்கள் சொல்கின்றோம் சஜீத் கூட்டணிக்கு இத்தேர்தலில் இரண்டு ஆசனம் தான் கிடைக்கும் அந்த இரண்டில் ஒருவர் தான் முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வெல்வதற்கு சாத்தியமுள்ளது அதுவும் சில நேரம் கிடைக்காது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.