அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட நாவிதன்வெளி - 01 பகுதியில் அமைந்துள்ள கிணத்தடிசந்தி எனும் இடமானது பல காலங்களாக இருள் சூழ்ந்து காணப்பட்டது இதனை பொதுமக்கள் பிரதேசசபையின் தவிசாளருக்கு தெரியப்படுத்திய போது அவர் உரிய நடவடிகடகை எடுத்த மின் இணைப்பைப் பெற்று பிரகாசமான ஒரு மின்விளக்கு ஒன்றை பொருத்தியுள்ளார் இது சிறிதுகாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது.
தற்போது அவ் மின்விளக்கை இனந்தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
No comments:
Post a Comment