தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்கவில்லை... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 10, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்கவில்லை...



முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைப்பிரச்சினை நிலைமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில்

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் மக்களிடையே எந்தவித பிளவுகளும் இல்லை . யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பதுபோல் தேர்தல் வரும்போதெல்லாம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் குழப்பத்தை ஏற்படுத்துவதை நாங்கள் வழமையாக கொண்டிருக்கின்றோம் .

முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் பார்க்கின்றபோது தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை அணைப்பதற்கு தண்ணீரை ஊற்றாமல் நெருப்பை ஊற்றி வளர்ந்தவர்களை தான் நாங்கள் கண்டு இருக்கின்றோம்.
அதேபோன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்த்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டிய இடத்தில் தீர்க்காமல் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் நிலையை அவதானிக்க முடிந்தது.

அண்மையில் கூட மட்டக்களப்பு அம்பாரை எல்லை பிரச்சினை பெரிதாக பேசப்படுகின்றது அவை ஏன் இந்தத் தேர்தல் காலத்தில் மாத்திரம் பேசப்படுகின்றது என்பதனை இரண்டு சமூகங்களும் சிந்திக்க வேண்டும். வேண்டுமென்றே இது சமூகத்திடம் மோதல்களை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றியை தக்கவைத்து கொள்ள இரு சமூகத்தை பூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

கல்முனை மாநகர சபையாக ஆக்கப்பட்ட காலத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகின்றது கல்முனை மாநகர சபை முதல்வர் றக்கீப் அவர்கள் அந்த மாநகர சபையில் பலகாலம் உறுப்பினராக இருந்திருக்கின்றார் அவ்வாறு இருந்தும் அவர் தற்போது கூறுவது அந்த எல்லை வகுக்கப்படவில்லை என்பது கேவலமான வார்த்தையாகும் . இவர்கள்தான் கல்முனையை 30 வருடமாக ஆட்சி செய்து வருகிறார்கள் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறார்கள் இந்த விடயத்தை தீர்க்கவில்லை என்றால் கட்சிக்கு மாத்திரமல்ல சமூகத்திற்கும் கேவலமாகும்.

கல்முனை எல்லைப் பிரச்சினை விடயத்தில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மூட்டிவிட்டு அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் இதனை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.