வரலாற்றுப்பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு நேற்று(24) கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
இன்று (25) வியாழக்கிழமை முதலாம் நாள் சடங்குப்பூஜை பாற்குடபவனியுடன் ஆரம்பமாகியது.
முதலாம்நாள் சடங்கு உபயகாரர் கி.ஜெயசிறில் ஆலயபூசகர் மாரியின்மாந்தன் மு.ஜெகநாதன் ஜயா ஆலயபிரமுகர்கள் முன்னேவர பக்தைகள் சம்மாந்துறை பத்ரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து பாற்குடமெடுத்து பவனி வந்து கோரக்கர் ஆலயத்தை வந்தடைந்தார்கள்.
அங்கு அகோரமாரியம்மனுக்கு பாற்குடம் சொரியப்பட்டது. தொடர்ந்து கோரக்கர் தமிழ்மகாவித்தியாலயத்தின் அன்னதானம் இடம்பெற்றது.
இதேவேளை 9நாள் சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை தீமிதிப்பு சடங்கு இடம்பெறும்.
கொரோனா காலகட்டம் என்பதால் ஆலயசடங்குகள் யாவும் சுகாதார விதிமுறைகளுக்கமைவாகவே இடம்பெறும் என ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
காரைதீவு நிருபர் சகா
No comments:
Post a Comment