மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் பங்கஸ் படர்ந்த திராட்சை பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை(24)முற்பகல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த திராட்சை பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் சென்ற பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் பெருந்தொகைையான பழுதடைந்த திராட்சை பழங்கள் மீட்டுள்ளதுடன் காரைதீவு பிரதேச சபையின் உதவியுடன் அவை அழிக்கப்பட்டன.
மேலும் இந்நடவடிக்கையை முன்னெடுத்த சுகாதார அதிகாரிகள் குறித்த
அழுகிய திராட்சை பழங்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டதோடு பாவனைக்குதவாத பழங்களை காரைதீவு பிரதேச சபையின் திண்ம கழிவு அகற்றும் பிரிவினரின் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..
சந்திரன் குமணன்
அம்பாறை.
No comments:
Post a Comment