அமெரிக்காவை பற்றி எரிய வைத்துள்ள ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 2, 2020

அமெரிக்காவை பற்றி எரிய வைத்துள்ள ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம்!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரபூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜோர்ஜ் ப்ளாய்ட் எப்படி இறந்தார்?அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது46 வயதான ஜோர்ஜ் பிளாய்ட் பொலிஸாரின் பிடியில் இருக்கும்போது, பொலிஸாரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததார் என அவரது மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினேபொலிஸ் நகரில், கடந்த மே மாதம் 25 ஆம் திகதி அன்று நடந்த கைது செய்யும் முயற்சியின்போது, அவர் உயிரிழந்தார். ஒரு காருக்கு அடியில் ஜோர்ஜ் பிளாய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும், அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து பொலிஸார் ஒருவர் அழுத்துவது போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. கொரோனா வைரஸ் ஊரடங்கை மீறி அமெரிக்காவில் போராட்டம் ஜோர்ஜ் பிளாய்ட் இறந்ததைக் கண்டித்து ஏழாவது நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. 

40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது. வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டக்காரர்கள் மீண்டும் குவிந்து, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களுக்கு தீவைத்தனர். கலவரத் தடுப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசினர்பதிலுக்கு பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இராணுவம் அனுப்பப்படும் : வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஓர் ஜனாதிபதியாக, அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அமெரிக்க வீதிகளில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவம் அனுப்பப்படும்'' என்றார். கலவரம், கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களை அழிப்பதை நிறுத்தவும்,சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தத் தயார் என ட்ரம்ப் கூறினார். '

அமெரிக்காவில் இப்போது நடப்பது அமைதியான போராட்டம் அல்லஇவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும், கடவுளுக்கு எதிரான குற்றமாகும்,'' என்றார். ''ஜோர்ஜ் பிளாய்ட்டின் மோசமான மரணத்தால் அமெரிக்கர்கள் கிளர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், கோபமான போராட்டக்காரர்களால் ஜோர்ஜ் பிளாய்ட்டிற்கு செலுத்தப்படும் அஞ்சலி பாதிக்கப்படக்கூடாது'' என ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப் கையில் பைபிள் பல மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் தங்களது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன எனவும் ட்ரம்ப்குற்றஞ்சாட்டியுள்ளார் வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் நடந்த கலவரம் மிகவும் அவமானகரமானது என கூறிய ட்ரம்ப், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றார். மக்களிடம்உரையாடிய பிறகு, போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதில் சற்று சேதமடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சென் ஜோன் தேவாலயத்திற்கு ட்ரம்ப் நடந்தே சென்றார்தேவாலயத்திற்கு வெளியே கையில் பைபிளை வைத்திருந்தபடி பேசிய ட்ரம்ப்,'' நமது நாடு உலகின் சிறந்த நாடு. 

நான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்போகிறேன்'' எனக் கூறினார்ஜோர்ஜ் ப்ளாய்ட் கைது செய்யப்பட்டது ஏன்? மே 25 ஆம் திகதியன்று,மினேபொலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிளாய்ட் 20 டொலர் கள்ள நாயணத்தாள் ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜோர்ஜை விசாரிக்க பொலிஸார் வந்துள்ளானர், பொலிஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்குபோடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸாரின் பிடியில் இருந்தபோது ஜோர்ஜ் இறந்துபோனார். இதனால் அமெரிக்கா முழுக்க போராட்டங்கள்ஆரம்பமாகின.1968 இல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு அமெரிக்காவில் இப்போதுதான் இந்த அளவிற்கு இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.