தென்தமிழீழ தமிழ்மக்களின் முழுமையான குரலாய் ஒலிப்பேன்! வேட்பாளர் கணேஸ் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 24, 2020

தென்தமிழீழ தமிழ்மக்களின் முழுமையான குரலாய் ஒலிப்பேன்! வேட்பாளர் கணேஸ்





தென்தமிழீழம் என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் ஏகோபித்த உரிமைக்குரலாய் ஒலிப்பேன். இளைஞர்களின் உத்வேகமும் முதியோரின் ஆலோசனைகளும் எனக்கு பக்கபலமாக உள்ளன.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான பொறியிலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தனது தேர்தல் பணிமனையைத் திற்நதுவைத்துரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கல்முனை மணற்சேனையிலுள்ள அவரது இல்லத்தில் இத்தேர்தல் பணிமனை இன்று(24) புதன்கிழமை த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இத்திறப்புவிழா நடைபெற்றது.

கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் த.தே.கூட்டமைப்பு ஒரேயொரு பெண் வேட்பாளரும் காரைதீவு பிரதேசசபை உறுப்பினருமான திருமதி சின்னையா ஜெயராணி உள்ளிட்ட பலரும் திறப்புவிழாவில் கலந்துகொண்டனர்.

அங்கு வேட்பாளர் கணேஸ் உரையாற்றுகையில்:

வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் மிகவும் வித்தியாசமான தேவைகளுடன் பூகோளரீதியில மாறுபட்டு மூவினங்களும் இணைந்து வாழுவது அம்பாறை மாவட்டமாகும்.

இங்கு 3ஆம் நிலையிலுள்ள தமிழ்மக்களுக்கான ஒரேயொரு பிரதிநிதித்துவத்தை தோற்கடிக்க வெளிமாவட்டத்திலிருந்து கருணா போன்று பலர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

அவர் பிறந்த மட்டக்களப்பை விட்டு அம்பாறை வந்துள்ளார். அங்கு அபிவிருத்தி செய்துவி;ட்டாராம். உண்மையில் இலங்கையில் வறுமையில் முதலிடம் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.முதலில் அவர் அங்கு கவனிக்கட்டும்.

முதலில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்கான வலிமையான அரசியல்பலத்தை உருவாக்கவேண்டும். அதனூடாக கல்வி பொருளாதார சமுக அபிவிருத்தியை முன்னெடுக்கவேண்டும். அதற்கான பாரிய திட்டங்களை வகுத்துள்ளேன். செயற்படுத்தக்கூடிய விஞ்ஞாபனத்தை விரைவில் வெளயிடுவேன்.

21ஆயிரத்து 820 தமிழ்வாக்குகளைக்கொண்ட கல்முனையில் இருந்துகொண்டு முழு மாவட்டத்தைiயும் அரவணைத்து ஒரே குடையின்கீழ் புத்திஜீவிகளினது வழிகாட்டலில் இளைஞர்களுடன் அரசியல் பயணத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ளேன்.

1982க்குப்பிறகு அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் பலவழிகளிலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழிவுப்பாதையிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அதற்காக துறைசார்ந்த புத்திஜீவிகளை இணைத்து அவர்களின் வழிகாட்டலுடன் இளைஞர்களின் அரவணைப்போடு பயணிக்கவுள்ளேன்.. என்றார்.

விழாவில் சட்டமாணி அருள்.நிதான்சன் முன்னாள் அதிபர்களான அக்கரைப்பாக்கியன் பாக்கியராசா எம்.கோபாலபிள்ளை இளைஞர்அணிசார்பாக வசந்தன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.