கொழும்பில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டல் மீது ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட முகமது இப்ராஹிம் இல்ஹாம் முகமதுவுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாத்தலே பிரதேச செயலாளர் சி. எல். திருமதி மதுவந்தி அவர்கள் மூலமாக இக் காணி கையளிக்கப்பட்டுள்ளது
முகமது இப்ராஹிம் இல்ஹாம் முகமதுவுக்கு சொந்தமான அந்நிலத்தில் செய்கை பண்ணப்பட்ட மிளகானது அப் பிரதேச மக்களினால் அறுவடை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இடமானது கடந்த மார்ச்சு மாதம் 30ஆம் தேதி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment