15 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின்னர் நேர்ந்த கதி! நடத்துனருக்கு 30 வருட சிறைத்தண்டனை - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 2, 2020

15 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின்னர் நேர்ந்த கதி! நடத்துனருக்கு 30 வருட சிறைத்தண்டனை

தான் கடமையாற்றிய பேருந்தில் பயணம் செய்த பாடசாலையை மாணவியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய பேருந்து நடத்துனருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது அனுராதபுரம் மேல் நீதிமன்றம். 15 வயது பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பேருந்து, மற்றும் லொட்ஜ்களில் அவரை பல முறை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் குற்றவாளியென நீதிமன்றம் அறிவித்தது.மாணவிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும்படியும், தவறினால் மேலும் 48 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.ஹொரவப்பொத்தானவிலிருந்து




அநுராதபுரத்திற்கு சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தில நடத்துனராக பணிபுரிந்த திருமணமான நடத்துனருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.தான் திருமணமாகாதவர் என்றும், மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் நடத்துனர் மாணவியிடம் பொய் கூறி ஏமாற்றி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருந்தார்.பேருந்திலும், பல்வேறு இடங்களிலும் பல சந்தர்ப்பங்களில் அவர் பிரதிவாதியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

அனுராதபுர போதனா மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி எச்.ஏ. கருணாதிலக உயர்நீதிமன்றத்தில் அளித்த மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை தீவிரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணைகஹடகஸ்டிகிலிய பொலிசாரால் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை கஹடகஸ்டிகிலிய சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.பின்னர், இலங்கை தண்டனைச் சட்டம் 364 (2) (இ) மற்றும் 354 பிரிவுகளின் அடிப்படையில் ஏப்ரல் 24, 2017 அன்று சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், நடத்துனருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.