மும்பை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 1000 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மும்பை மாநகராட்சி பகுதியில் தாக்கம் அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் சிறப்பு கிசிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 1000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மும்பை மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில் மும்பை மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment