இலங்கையில் இன்று 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கடற்படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஏனைய 15 பேரும் கிரிகம தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். குறித்த 15 பேரும் அண்மையில் டுபாயில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் 1047 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 604 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
434 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment