நேற்றைய தினம் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகள்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 28, 2020

நேற்றைய தினம் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகள்..

நேற்று கொரோனா வைரஸ் தொற்றுறுதியான நிலையில் அடையாளம் காணப்பட்ட 150 பேரில் 92 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

.
அத்துடன் நேற்று கொரோனா தொற்றுறுதியானவர்களில் 5 பேர் அண்மையி;ல் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றுறுதியான 53 கடற்படை சிப்பாய்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றைய தினமும் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினமே கொரோனா தொற்றுறுதியான அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
.
ஏனையர்கள் முல்லேரியா, மினுவாங்கொட மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் கொரோனா தொற்றுறுதியான 727 பேர் தற்போது சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு முகக்கவசங்ககை அணிவிப்பதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளது
.
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ஆலோசனைகள் சுகாதார அமைச்சின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 46 துறைகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் மூன்று முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதற்கு கற்று கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
அடிப்படை சுகாதார சட்டங்களின் அடிப்படையில் முகக்கவசங்கள் உரிய முறையில் அணியப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.