ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 27, 2020

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்


மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (27) புதன்கிழமை கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை (28) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பாராளுமன்ற கட்டடத் தொகுயில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்து அவரது பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனில் பிற்பகல் 2 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பின்னர் அங்கிருந்து பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு றம்பொடை வௌங்டனிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்து மீண்டும் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு கொட்டக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (சி.எல்.எப்) இல்லத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இறுதிக்கிரியைகள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் அட்டன் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ராஜலக்ஷ்மி அம்மையாரை துணைவியாக கொண்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், நாச்சியார், விஜயலக்ஷ்மி, ஜீவன் குமாரவேல் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.