13 மில்லியனுக்கும் அதிகமான பி சி ஆர் பரிசோதனைகள்" - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 20, 2020

13 மில்லியனுக்கும் அதிகமான பி சி ஆர் பரிசோதனைகள்"கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எடுக்கும் நடவடிக்கைகளில் 30 நாட்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த அமைப்புக்கான நிதி முழுமையாக நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடையாளங் காணப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விபரங்களை சீன அரசாங்கம் மறைத்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.

அத்துடன் இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அந்த அமைப்பின் தாமதமான செயற்பாடுகளால் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேநேரம் கொரோனா வைரஸ் விடயத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தமை தொடர்பாக மதிப்பீடு செய்ய கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
அந்த மதிப்பீட்டு விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடுத்த 30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.
அவ்வாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த விடயம் குறித்து உரிய நேரத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவில் கொரானா தொற்றினை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பீ சி ஆர் பரிசோதனை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.