வுனியா பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 15 ஜூலை, 2020

வுனியா பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி


வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலத்தினை  (15) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை காணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின் அறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை உறவினர்கள் அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்

சடலமாக மீட்கப்பட்டவர் டவாலிகா பிரபாகர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.