புவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்!! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வியாழன், 16 ஜூலை, 2020

புவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்!!



இருநூறு ஆண்டுகள் பழமையான உலகப் புகழ் பெற்ற ஜானி வாக்கர் நிறுவனத்தின் விஸ்கி இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஜானி வாக்கர் விஸ்கி தயாரிப்பு உரிமம் தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சூழலியலுக்கு இணக்கமான இந்த முயற்சியை அடுத்த ஆண்டிலிருந்து சோதனை செய்து பார்க்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கிகள் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்களில் கிடைக்க, தனது பிற பிராண்டுகளில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. 

கண்ணாடி பாட்டிகளும் கரியமில வாயு வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பேப்பர் பாட்டில்களை தயாரிக்க பல்பெக்ஸ் எனும் துணை நிறுவனத்தை டியாஜியோ தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் யுனிலீவர் மற்றும் பெப்ஸிகோ நிறுவனத்துக்குத் தேவையான பாட்டில்களையும் தயாரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.