கிழக்கில் வெற்றிடமாகவுள்ள 15 பாடசாலை அதிபர்களுக்கு விண்ணப்பம் கிழக்கு மாகாண கல்வியமைச்சு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 6, 2020

கிழக்கில் வெற்றிடமாகவுள்ள 15 பாடசாலை அதிபர்களுக்கு விண்ணப்பம் கிழக்கு மாகாண கல்வியமைச்சு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன்..

கிழக்கு மாகாணத்தில் 15பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சு விண்ணப்பங்களைக்கோரியுள்ளது.

நான்கு 1ஏபி பாடசாலைகளுக்கும் பதினொன்று 1சீ தரப் பாடசாலைகளுக்கும் இவ்விண்ணப்பம் மாவட்டரீதியாகக் கோரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்பதாக அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளருடாக விண்ணப்பிக்கவேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா அறிவித்துள்ளார்.

காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரி செட்டிபாளையம் மகா வித்தியாலயம் சேனையூர் மத்தியகல்லூரி கிண்ணியா அஸ்சிறாஜ் முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகிய நான்கு 1 ஏபி பாடசாலைகளுக்கு வெற்றிடம்நிலவுகிறது.

வெற்றிடம் நிலவும் குறித்த பாடசாலை அமையப்பெற்ற வலயத்தில் பணியாற்றும் முதலாந்தர அதிபர்கள் விண்ணப்பித்திருந்தால்  முன்னுரிமை வழங்கப்படும். அந்த வலயத்தில் முதலாந்தர அதிபர் தரத்திலுள்ளவர்கள் இல்லாத பட்சத்தில்  ஏனைய வலயங்களிலுள்ள முதலாந்தர அதிபர்கள் கருத்திற்கொள்ளப்படுவார்கள்.

குறித்தவலயத்தில் முதலாந்தர அதிபர்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில் அவ்வலயத்திலுள்ள இரண்டாந்தர அதிபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்தவலயத்தில் அவ்வகை அதிபர்கள் இல்லாவிடில் ஏனைய வலயத்திலுள்ள இரண்டாம்தர அதிபர்கள் கவனத்திற்கொள்ளப்படுவர்.

குறித்தவலயத்தில் முதலாந்தர அதிபர்கள் மற்றும் இரண்டாந்தர அதிபர்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில் அந்தவலயத்திலுள்ள மூன்றாம்தர அதிபர்கள் கவனத்திற்கொள்ளப்படுவர்.

அதிபர்கள் 59வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும்.குறித்த தகைமையுடைய அதிபர்கள் விண்ணப்பித்திருந்தால் அடுத்தர அதிபாகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டார்கள். நேர்முகப்பரீட்சை ஊடாக புள்ளியிடலுக்கேற்ப பொருத்தமான அதிபர்கள் 

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.