கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திரஜபம். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 5, 2020

கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திரஜபம்.



கிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...!

இன்று சந்திர கிரகணம் ஜூன் 05-2020...

இன்று வெள்ளிக்கிழமை வானில் அரிய நிகழ்வு: பெனும்பிரல் சந்திர கிரகணம் பற்றி அறிந்தீர்களா?

சந்திர கிரகணங்கள் மூன்று வகையானவை – முழு சந்திர கிரகணம் (total lunar eclipse), பகுதி சந்திர கிரகணம் (partial lunar eclipse) மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம் (penumbral lunar eclipse). முழு நிலவின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது அது சூரியனின் கதிர்கள் நேரடியாக சந்திரனை சென்றடைவதை தடுக்கிறது. இது நமது இயற்கை செயற்கைக்கோளில் ஒரு நிழலைக் காட்டுகிறது அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும்.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை நாம் ஜனவரி மாதத்தில் கண்டிருக்கிறோம். இது போன்ற மேலும் மூன்று நிகழ்வுகள் இந்த ஆண்டில் நிகழப்போகிறது அடுத்த நிகழ்வும் இந்த ஜூன் மாதத்திலேயே நடக்க இருக்கிறது. இந்த கிரகணம் பெனும்பிரல் ஒன்றாக இருக்கும் இதை ஒரு சாதாரண முழு நிலவில் இருந்து வேறுபடுத்துவது கடினம்.


கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திரஜபம்.

பொதுவில் கிரகண நேரம் - பிரபஞ்சத்தின் சக்தி அளவிட முடியாமல் ஆர்ப்பரிக்கும். சமைத்தஉணவு என்று இல்லை - நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட, கெட்டுப் போய் விடுமாம். அதனால் உடல் நலம்பாதிக்கப்படும். ஆதலால் கிரகண நேரத்திற்கு முன்னும் , பின்னும் குறைந்தது இரண்டு மணிநேரமாவது இடைவெளி விட்டு உணவு உண்ணுவது நல்லது...

பெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி,பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து, அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்......


தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம்..?

மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த
நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ...

எங்கள் ஊரில் கிரகண நேரத்தில் - உலக்கையை நிற்க வைப்பார்கள்.
கொட்டுக்கூடை என்று சிறிய வெண்கலப் பாத்திரம் ஒன்று இருக்கும்.

அதில் நல்லெண்ணையை ஊற்றி -
உலக்கையை நிறுத்தி வைப்பார்கள். கிரகண நேரத்தில் அந்த உலக்கை அப்படியே நெட்டுக் குத்தாக நிற்கும். மற்ற நேரங்களில் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. 

சிறிய வயதில் , எங்கள் கிராமத்தில் நானே பல தடவை பார்த்து
இருக்கிறேன்... (கொட்டுக் கூடையை விடுங்க... உலக்கையே இப்போ இருக்கிற தலைமுறைக்கு தெரியுமான்னு தெரியலை...)

கர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது...

கிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...!

பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றால் என்ன ?

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை சரியான நேர்கோட்டில் அமையாமல் (imperfectly aligned) இருக்கும் போது பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழும். பூமி தனது வெளிப்புற நிழலின் மூலம் சூரியனின் ஒளி நேரடியாக சந்திரனை சென்றடைவதை தடுக்கும், இது பெனும்பிர என அழைக்கப்படுகிறது. பூமியின் நிழலின் இருண்ட மையத்தை விட பெனும்பிர மிகவும் மங்கலானது என்பதால், பெனும்பிர கிரகணத்தை சாதாரண முழு நிலவிலிருந்து வேறுபடுத்துவது கடினம். பூமியின் நிழலின் மங்கலான, வெளிப்புறப் பகுதி வழியாக சந்திரன் நகரும்போது, பூமியிலிருந்து ஒரு பெனும்பிரல் சந்திர கிரகணத்தைக் காண்கிறோம்.
இன்று வரவிருக்கும் சந்திர கிரகணத்தை எங்கிருந்து பார்ப்பது

ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோப்பா அல்லது ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் இருந்தால் நீங்கள் இந்த பெனும்பிரல் சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.

பெனும்பிரல் சந்திர கிரகணம் நேரம்

Indian Standard Timing (IST)ன் படி, இந்த சந்திர கிரகணம் ஜூன் 5 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு துவங்கி அதிகப்பட்ச கிரகணத்தை ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 12.54 மணிக்கு எட்டும். இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 2.34 மணிக்கு முடிவடையும்.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ம் தேதி ஏற்படுகின்ற இந்த சந்திர கிரகணத்தை தவிர மேலும் இரண்டு கிரகணங்கள் வரப்போகின்றன. 

ஒரு சந்திர கிரகணம் ஜூலை மாதமும் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் நவம்பர் மாதமும் நிக்ழப்போகிறது. இந்த இரண்டு கிரகணங்களும் பெனும்பிரல் தான்.

கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திரஜபம்.

கிரகண நேரத்தில் நீங்கள் செய்யும் மந்திர ஜபத்திற்கு கோடி மடங்கு பலன் அதிகம். 

இந்தநேரத்தை, பெரிய பெரிய சித்தர்களும், ரிஷிகளும் - தவறாமல் பயன்படுத்துவர்.

அவர்களை பின்பற்றி, நாமும் இறையருளை வேண்டுவோம்..நமது நியாயமான கோரிக்கைகளை அந்த பரபொருள் கண்டிப்பாக நிறைவேற்றும்... !

இந்த பூமி , ஒரு குறிப்பிட்ட அச்சில் , வேகமாக சுற்றுகிறது... அந்த சுற்றும் விசையில் , வேகத்தில் வெளிவரும் சப்தமே -
பிரணவ மந்திரமாகிய ' ஓம் " , உலகில் உள்ள அத்துணை மதங்களிலும் - ஒலிக்கப்படும்மந்திரங்கள் அனைத்தும் இந்த பிரணவ மந்திர அதிர்வை ஒட்டியே இருக்கும்.

நமது மந்திர அதிர்வுகள் இந்த மந்திரத்தை ஒட்டி இருக்கும்போது , அபரிமிதமான பலன்கள்நமது ஆன்மாவுக்கு கிடைக்கிறது.

ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர்ந்து நல்ல இசை கிடைப்பது போல ,அந்த இசையை நம் காத்துகேட்பதுபோலே , மனம் ஒன்றுவது போல - மந்திர அதிர்வுகளின் இசையில் இறைவன்உங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார் .

கிரகண நேரத்தை தவறாமல் பயன்படுத்தி...

நமக்கு பிடித்த இறைநாமத்தை 
(ஓம், 
ஓம் கம் கணபதியே நமஹ, 
ஓம் சூர்யாய நமஹ, 
ஓம் நமச்சிவாய, 
ஓம் சரவணபவ, 
ஓம் சக்தி, 
ஓம் நமோ நாராயண, 
ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜேய் ஜேய் ராம், 
ஹரேராம ஹரேராம ராம ராம ஹரே ஹர ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...)

மந்திர ஜெபம் செய்யுங்கள்...

தன வாழ் நாள் முழுவதும் , ஒருமிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி செய்த பெரியவர்கள் கண்டறிந்த மந்திரங்கள் இது .... 

இதைமுறைப்படி ஜெபித்து வர , உங்களுக்கு நீங்கள் செல்லும் பாதை , செல்ல வேண்டிய பாதைதெளிவாக தெரிய வரும்.

உங்கள் பிறவியின்நோக்கம் என்ன , அதை எப்படி ஈடேற்றுவது என்கிற அத்தனை விஷயங்களும், இந்த மந்திரஜெபங்களினால் உங்களுக்கு கிட்டும்...


கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திரஜபம்.

கிரஹண தோஷ பரிகார ஸ்லோகம் :

இந்த்ரோ[அ]நலோ தண்டதரஸ்ச
ருக்ஷ:பாசாயுதோ வாயுக்குபேர ஈசா:
குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த
சந்த்ரக்ரஹ தோஷ சாந்திம்.


ஓம் நமச்சிவாய.. அன்புடன் செல்வம்மோஹி

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.