நல்லாட்சி அரசால் இடைநிறுத்தப்பட்டுள்ள நியனங்களை விரைவில் மீள வழங்குமாறு கோரிக்கை - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, August 20, 2020

நல்லாட்சி அரசால் இடைநிறுத்தப்பட்டுள்ள நியனங்களை விரைவில் மீள வழங்குமாறு கோரிக்கை

தமது ஆட்சியின் போது அமைச்சரவை அங்கிகாரத்தோடு வழங்கப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள 6,548 திட்டமிடல் உதவியாளர்களுக்கான நியனங்களை விரைவில் மீள வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். நேற்று மாலை ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அத்தோடு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 1,300 இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான நியமனங்களையும் விரைவில் வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் நேற்று (20) மாலை பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு இதனை கொண்டு வந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த விடயத்தை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு இணக்கம் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்தார்.

அதனூடாக திட்டமிடல் உதவியாளர்களுக்கும், இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு விமோசனம் கிடைக்கும் என அரவிந்தகுமார் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த நியமனங்கள் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக வழங்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதி தேர்தல் காரணமாக தேர்தலகள் ஆணைக்குழுவால் அந்த நியமனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இன்று வரையிலும் மேற்குறித்த நியமனங்களை பெற்றவர்கள் தமது கடமைக்களுக்கு சமூகமளிப்பதற்கான செயற்படுகள் மேற்கொள்ளப்படவில்லைல எனபது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.